● எம். கீதா, துவாக்குடி.
எனது தம்பி சந்தானகிருஷ்ணன் தனியார் கடையில் எட்டாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்க்கிறான். 36 வயதாகியும் இன்னும் திருமணம் கூடவில்லை. எப்போது நடக்கும்? எப்படிப்பட்ட பெண் அமையும்?
சந்தான கிருஷ்ணன் உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி. நடப்பு சுக்கிர தசையில் ராகு புக்தி 12-3-2020 வரை. பிறகுதான் குரு புக்தி வரும். குரு புக்தியில் திருமணம் கூடும். அன்னிய சம்பந்தம். பிரைமரி ஸ்கூல் டீச்சர் வேலை அல்லது டெய்லரிங் தொழில் செய்யும் பெண் அமையும். ராகு புக்திக்காக விருப்பமான ஒரு கிழமையில் ராகு காலத்தில் சமயபுரம் மாரியம்மனுக்கு அர்ச்சனை, பூஜை செய்யவும். அப்படியே அருகிலுள்ள விக்ரமாதித்தன் வழிபட்ட உஜ்ஜயினி காளியம்மனுக்கு ஒரு அபிஷேக பூஜை செய்யவும். திருமணத்தடை விலகும். தொழில் முன்னேற் றம் உண்டாகும். வருமானம் பெருகும்.
● சி. சுந்தரம், சென்னை-56.
என் மகள் மனோசித்ரா வுக்கு எப்போது திருமணம் நடக்கும்? சொந்தமா? அசலா?
ஜாதகத்தில் தோஷம் இருந் தால் பரிகாரம் கூறவும். மனோசித்ராவுக்கு மக நட்சத் திரம், சிம்ம ராசி. 5-ல் ராகு இருப்பது நாகதோஷம். நடப்பு சூரிய தசை. 2020 பங்குனியில் (மார்ச் மாதம்) 27 வயது முடியும். அதன்பிறகு திருமணம் நடக்கும். அதற்கு முன்னதாக காரைக்குடியில் சுந்தரம் குருக்களைத் தொடர்புகொண்டு (செல்: 99942 74067). சூலினி துர்க்கா ஹோமமும், திருஷ்டி துர்க்கா ஹோமமும், காமோ கர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வர ஹோமமும் செய்து மகளுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அவருடன் பெற் றோரும் கலச அபிஷேகம் செய்து கொள்ளலாம். உடன்பிறந்த வர்கள் இருந்தால் அவர்கள் பெயர், நட்சத்திரமும் சங்கல் பத்தில் சேர்த்துக்கொள்ளலாம்.
● பி. சுந்தரம், கோவலூர்.
இதுவரை எப்படியோ வாழ்க்கை ஓடிவிட்டது. இனி அடிமை வேலையா? சுயதொழிலா? குடும்பத்தில் எந்த நிம்மதியும் இல்லை. மரியாதையும் இல்லை. பாசமும் இல்லை.
பூரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னம். எனது அனுபவத்தில் கும்ப ராசிக் காரர்களும் சரி; கும்ப லக்னத் தாரும் சரி- அனுதாபத்துக் குரியவர்கள் என்பதுதான் முடிவு! அதிலும் ராசிநாதனும் குரு- குடும்பாதிபதியும் குரு. அவர் 12-ல் மறைவு, நீசம், கேது சம்பந்தம், ராகு பார்வை. காவி கட்டாத சந்நியாசியாக வாழ்வதைவிட காவிகட்டிய சந்நியாசியாகவே எங்கேயாவது ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து மிஞ்சிய வாழ்க்கைப் பொழுதை ஓட்டலாமே!
● ஆர். ஆறுமுகம், திருப்பூர்.
என்னுடைய நண்பர் உதயகுமார் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசி, கடக லக்னம். மனைவி இறந்து இரண்டு வருடமாகிவிட்டது. அவருக்கு மறுமணம் நடக்குமா? எப்போது?
2019 செப்டம்பரில் 34 வயது முடிந்து 35 ஆரம்பம். 20 வயது முதல் 38 வரை ராகு தசை. ராகு 10-ல் நின்று சனி, கேது பார்வையைப் பெற்றதால், ராகு தசையில் வாழ்வை இழந்தார். பாக்கியாதிபதி குருவும் நீசம்! வரும் ஆவணிமுதல் திருமண யோகம் ஏற்படும். முன்னதாக காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல்: 99942 74067) தொடர்புகொணடு சூலினிதுர்க்கா ஹோமம், காமோகர்ஷண ஹோமம், கந்தர்வராஜ புனர் விவாக ஹோமம் உள்பட 19-20 ஹோமம் செய்து அவருக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். அதன்பின்பு ஆரோக்கியமான- அதிர்ஷ்டமான- ஆயுள் தீர்க்கமான மனைவியும் வாரிசு யோகமும் அமையும்.
● கே. சந்திரகலா, கூடலூர்.
என் பெண்ணுக்கு ஐந்தாவது தசையாக செவ்வாய் தசை வருகிறது. நல்லதா? கெட்டதா?
செவ்வாய் மேஷத்தில் ஆட்சி என்பதால் பாதகம் செய்யாது. பயப்பட வேண்டாம். அம்சத்திலும் மேஷத்தில் ஆட்சி. அதனால் வர்க்கோத்தமம். கெடுதல் இல்லை.
● எஸ். ஜெகன், மதுரை.
மாந்த்ரீகம் பயின்று அதில் பேரும் புகழும் அடைய வேண்டு மென்பது என்னுடைய பல வருட லட்சியம்! பத்து வருடமாக வழிபாடும் முயற்சியும் செய்கி றேன். ஆனால் பல தடைகள், துன்பங்கள். இப்போது கடனும் அதிகமாகிவிட்டது. விமோசனம் எப்போது கிட்டும்?
உடனே மாந்த்ரீகப் பயிற்சியை யும் முயற்சியையும் நிறுத்து வதே விமோசனம்! "கத்தி எடுத் தவன் கத்தியால் சாவான்' என்பது பழமொழியல்ல- உண்மை நிலை. மாந்த்ரீகத்தில் பணம் சம்பாதிக்க லாம். ஆனால் குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் ஏற்படாது. உங்கள் வாரிசுகளுக்கும் எந்த நல்லதும் நடக்காது. ஊனமுள்ள குழந்தைகள் அல்லது குடும்பத்தில் துர்மரணங்கள் அல்லது அந்திமக் காலத்தில் அகால மரணம் ஏற்படும். எனவே இந்த விபரீத லட்சியத்தை விட்டுவிட்டு ஜோதிடம் படியுங்கள். அல்லது ஆரூடம், தெய்வ வழிபாடு, அருள்வாக்கு சொல்லுங்கள். மாந்த்ரீகம் கற்றுத் தருகிறேன் என்றும், பயிற்சி வகுப்புகள் நடத்து கிறேன் என்றும் விளம்பரம் செய்து சம்பாதிக்கிறவர்கள் சொந்த வாழ்க்கையில் சோகத்தையே சந்திப் பார்கள். அல்லது கேவலத்துக்கு ஆளாவார்கள். இந்த வேண்டாத வேலை வேண்டாம்.
● விமல், ஆற்காடு.
எனது தங்கை 18 வயதில் வீட்டை விட்டு வெளியேறி, காதலித்து திருமணம் செய்துகொண்டாள். கணவர் ஆட்டோ ஓட்டுகிறார்; குடிகாரர். பணம் கொடுப்பதில்லை. எனது தாய் எங்கள் சொல்லைமீறி தங்கையைத் தேடிக்கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்துவந்துவிட்டார். அப்போது அவள் ஏழு மாத கர்ப்பிணி. குழந்தை பிறந்து இரண்டு வருடத்தில் அவள் வேறொருவனுடன் ஓடிவிட்டாள். மூத்த கணவனும், மகனை நீங்களே வளர்த்துக் கொள்ளுங்கள் என்று எங்களிடமே விட்டுவிட்டு ஒதுங்கிவிட்டார். இந்தக் கவலையிலேயே எனது தாய் மரணம டைந்தார். பிறகு எனக்கும் தம்பிக்கும் திருமணமாகி, இருவருக்கும் ஆளுக்கொரு மகன் உண்டு. தகப்பனாருக்கு 70 வயது. எல்லாரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். தங்கை மகனுக்கு 14 வயது. அடம்பிடிக் கிறான். பொருட்களைத் தூக்கி வீசு கிறான். பெரியோர் சொல் கேட்பதில்லை. அவன் எப்போது திருந்துவான்?
30-3-2006-ல் பிறந்தவன். எட்டரை வயதுவரை கேதுதசை. பிறகு 20 வருடம் சுக்கிர தசை. தகப்பனார் காரகன் சூரியன்; தாயார் காரகன் சந்திரன். சூரியன் லக்னாதிபதி. இவர்களுடன் ராகு- கேது சம்பந்தம். குரு 3-ல் மறைவு. அடுத்து வரும் சுக்கிர தசையும் 6-ல் மறைவு. மீன ராசிக்கு சுக்கிரன் நல்லது செய்யமாட்டார். எனவே மேலும் தவறான வழிகளில் போக லாம். அதைப்பார்த்து உங்கள் பிள்ளையும் தம்பி பிள்ளையும் கெட்டுப்போகலாம். எனவே அவனை ஹாஸ்டலில் அல்லது ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்துவிட்டு பராமரிப்புக்கு பணம் கொடுங்கள். 18 வயதில் திருந்தும்போது சேர்த்துக் கொள்ளுங்கள்.
● கே. மங்கையர்க்கரசி, விழுப்புரம்.
எனக்கு 36 வயதில் திருமணமாகி ஒருநாள்கூட வாழாத சூழ்நிலை. கணவரின் நடத்தை சரியில்லையென தெரிந்து, கல்யாண மண்டபத்திலேயே பிரிந்து, விவாகரத்தும் பெற்றுவிட்டேன். சகோதரர்கள் இருவருக்கும் (43 வயது, 38 வயது) திருமணமாகவில்லை. தகப்பனார் இல்லை. தாயாருக்கும் 75 வயது. உடல்நிலை சரியில்லை. என்னால் என் தம்பிகளுக்கும் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. நான் இருப்பதே எல்லாருக்கும் சிரமமாக உள்ளது. பரிசுத்தமான எனக்கு ஏன் கடவுள் இத்தனை தண்டனை கொடுத்தார்?
அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கன்னி லக்னம். 7 கணவன் ஸ்தானம். அதில் சனி, ராகு, சுக்கிரன், புதன் இத்தனைபேரும் இருக்க, அவர்களுக்கு வீடுகொடுத்த குரு 12-ல் மறைவு; பார்வையில்லை. புதன் நீசம். 8-ல் சூரியன், செவ்வாய். 3-ல் சந்திரனும் நீசம். இப்படியொரு பாவப்பட்ட ஜாதகத்தை நான் பார்த்ததே இல்லை. 47 வயது நடப்பு. 40 வயது முதல் ராகு தசை வேறு. முறையான திருமணமென்பது ஒரு கேள்விக்குறிதான். வாரிசு யோகமும் இருக்காது. 9-ஆம் இடம், 5-ஆம் இடம் இரண்டுக்கும் குரு பார்வை இல்லை. அதனால் பூர்வபுண்ணிய பலமும் இல்லை. பரிசுத்தமானவருக்கு கடவுள் ஏனிந்த தண்டனை என்று கேட்கிறீர்களே! நீங்களே நினைத்துக்கொள்வதா? போன ஜென்மத்தில் என்னென்ன பாவம் செய்தீர்களோ- கடவுளுக்குத்தான் தெரியும். இல்லாவிட்டால் இப்படி ஒரு பாவகிரக அமைப்பில் பிறக்கமுடியுமா? உங்கள் குடும்பத்துக்கே சர்ப்ப சாப தோஷமும், முன்னோர்கள் சாப தோஷமும் இருப்பதால்தான் சகோதரர்களுக்கும் திருமணம் தடையாகிறது. குடும்பத்துடன் மயிலாடுதுறை அருகில் (பூந்தோட்டம் வழி) செதலபதி சென்று தில தர்ப்பணபுரியில் பிதுர்க்கடன் பரிகார பூஜை செய்யுங்கள், விமோசனம் உண்டாகும்!